- பஞ்சாப்
- முன்னாள்
- முதல் அமைச்சர்
- சுக்பர்
- பாத்தல்
- அமைச்சர்
- சிரோமனி அகலி தால்
- பிரகாஷ்
- பிரதி முதலமைச்சர்
- பொட்சோய்
சண்டிகர் : பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சரும், முன்னாள் அகாலிதளம் கட்சி தலைவருமான சுக்பீர் சிங் பாதலை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. பஞ்சாபில் கடந்த 2007 முதல் 2012 வரை சிரோமணி அகாலி தள் ஆட்சியில் இருந்தது. அப்போது பிரகாஷ் சிங் பாதல் முதல்வராகவும், அவரது மகனான சுக்பிர் சிங் பாதல் துணை முதல்வராகவும் இருந்தனர். 2007ல் சீக்கிய மதத்தை அவமதித்துப் பேசிய தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு மத நிந்தனை வழக்கில் மன்னிப்பு வழங்கப்பட்டது, அவர் தண்டிக்கப்படாதது உள்ளிட்ட குற்றங்கள் அப்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டு, அது குறித்து சீக்கிய மதத்தின் உயர் அதிகார அமைப்பான அகால் தக்த் விசாரணை நடத்தியது. இதில், பிரகாஷ் சிங் பாதல், சுக்பிர் சிங் பாதல், அப்போது அமைச்சர்களாக இருந்தவர்கள், சிரோமணி அகாலி தள் கட்சியின் உயர் பொறுப்பில் இருந்தவர்கள் ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கான தண்டனையும் அறிவிக்கப்பட்டது.
பிரகாஷ் சிங் பாதல் மறைந்துவிட்டதை அடுத்து,. சுக்பீர் சிங் பாதல் உள்ளிட்டோர் பொற்கோவில் சமையலறையில் பாத்திரங்களை சுத்தம் செய்ய வேண்டும், பக்தர்களின் காலணிகளை துடைக்க வேண்டும் என தண்டனை விதிக்கப்பட்டது. சுக்பீர் சிங் பாதல் சிரோமணி அகாலி தள் கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்றும் 5 பேர் கொண்ட உயர் மத தலைவர்கள் தண்டனை விதித்தனர்.தங்கள் மீதான குற்றத்தை ஏற்பதாக சுக்பிர் சிங் பாதல் உள்ளிட்டோர் ஒப்புக்கொண்டனர். தண்டனையை ஏற்கும் விதமாக அவர்கள் அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலுக்கு வந்து தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதற்கான அட்டையை கழுத்தில் மாட்டிக்கொண்டு சமையலறையில் பாத்திரங்களை சுத்தம் செய்தனர். கழிவறைகளையும் சுத்தம் செய்தனர்.பாதலின் கால் துண்டிக்கப்பட்டதால் அவருக்கு விலக்கு அளித்து கோயில் வாயில் காப்பாளராக பணியாற்ற உத்தரவிடப்பட்டது.
தண்டனையை நிறைவேற்ற பொற்கோயில் வாயிலில் இன்று காலை சக்கர நாற்காலியில் ஈட்டியை பிடித்துக் கொண்டு காவல் காத்தார் சுக்பீர் சிங் பாதல்.அப்போது அங்கு வந்த மர்ம நபர் சுக்பீர் சிங் பாதலை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினார். நல்வாய்ப்பாக இந்த தாக்குதலில் சுக்பிர் சிங் காயம் அடையவில்லை. நூலிழையில் அவர் உயிர் தப்பிய நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுற்றிவளைத்து சுக்பீர் சிங் ஆதரவாளர்கள் பிடித்தனர். துப்பாக்கியால் சுட்ட நபர் பஞ்சாப் காவல்துறையால் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவரது பெயர் நாராயணன் சிங் என்பது தெரியவந்தது.
The post பொற்கோயிலில் பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் மீது மர்ம நபர் துப்பாக்கிச் சூடு : நூலிழையில் உயிர் தப்பினார்!! appeared first on Dinakaran.