- முதல் அமைச்சர்
- எம். ஸ்டால்
- சென்னை
- மு.கே ஸ்டாலின்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- கடலூர்
- பெஞ்சல் புயல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தின மலர்
சென்னை: தமிழகத்தில் பெஞ்சல் புயல் தாக்கிய விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்றும், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சேதமடைந்த குடிசைகளுக்கு இழப்பீட்டு தொகையான ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். மழையினால் பாதிக்கப்பட்ட (33 சதவீதம் மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசன பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.17 ஆயிரம் வழங்கப்படும்.
பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதமுற்றிருப்பின் இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.22,500 வழங்கப்படும் என்றும் முதல்வர் ஆணையிட்டுள்ளார். வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் கடந்த 30ம் தேதி மாலை மாமல்லபுரத்துக்கும் – புதுச்சேரிக்கும் இடையே கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அதி கனமழை பெய்தது.
புயல் கரையை கடந்தபோது கொட்டித்தீர்த்த கனமழையால் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி ஆகிய 8 மாவட்டங்களில் 50 செ.மீ. வரை மழை பொழிவு இருந்தது. இதனால் அந்த பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கி உள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் சாலைகளில் பல அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. போக்குவரத்து அடியோடு முடங்கியது.
பயிர்கள் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. வீடுகளில் சிக்கியுள்ள மக்களை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக போராடி மீட்டு வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைப்பது மற்றும் நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. காணொலிகாட்சி வாயிலாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வி.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் முருகானந்தம், நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாட்டில் நவம்பர் 30ம் தேதி முதல் வீச தொடங்கிய பெஞ்சல் புயலின் காரணமாக பரவலான மற்றும் கடுமையான மழைப்பொழிவு தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் காணப்பட்டது.
குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழையின் அளவு வழக்கத்தைவிட மிக அதிகமாக இருந்தது. இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் மழைப்பொழிவு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு, தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் பெரும்பகுதி விளைநிலங்களை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது.
அத்துடன், இந்த மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள், பாலங்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள், பொதுக்கட்டிடங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளும் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. அங்கு பெஞ்சல் புயலின் தாக்கத்தையும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும் நேரில் ஆய்வு செய்திட நேற்று முன்தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, பொதுமக்கள் மற்றும் அலுவலர்களிடம் பாதிப்பு விவரங்களையும், மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்து, தேவையான அறிவுரைகளை வழங்கினார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், அமைச்சர்களும் இம்மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இன்றும் நேரடியாக சென்று நிவாரண நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து துரிதப்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், தலைமை செயலகத்தில் பெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பின்வரும் நிவாரண உதவிகள் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
* புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்படும்.
* சேதமடைந்த குடிசைகளுக்கு இழப்பீட்டு தொகையான ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
* முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
* மழையினால் பாதிக்கப்பட்ட (33 சதவீத மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசன பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.17 ஆயிரம் வழங்கப்படும்.
* பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதமுற்றிருப்பின் (33 சதவீத மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.22,500 வழங்கப்படும்.
* மழையினால் பாதிக்கப்பட்ட (33 சதவீத மற்றும் அதற்கு மேலாக) மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500 வழங்கப்படும்.
* எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.37,500 வழங்கப்படும்.
* வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.4000 வழங்கவும், கோழி உயிரிழப்பு நிவாரணமாக ரூ.100 வழங்கப்படும்.
* அதி கனமழையின் காரணமாக கடுமையான மழை பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
* மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சான்றிதழ்கள், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தி புதிய சான்றிதழ்கள் வழங்கப்படும்.
* மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதிப்புக்குள்ளான குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு புதிய பாட புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
* மேலும் 3 மாவட்டத்துக்கு விரைவில் நிவாரண உதவி
பெஞ்சல் புயல் காரணமாக மழை பொழிவை சந்தித்துள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நிவாரணம் வழங்குவது தொடர்பாக, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தங்கள் மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரங்களை அரசுக்கு அனுப்பி வைத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
The post வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் குடும்பத்துக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம்: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.