×

புதுவை மாநில மதுபாட்டில் கடத்தியவர் கைது

திருவிடைமருதூர், டிச.3: புதுவை மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்த வாலிபரை கைது செய்து, அவரிடமிருந்த இருசக்கர வாகனம் மற்றும் மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். திருவிடைமருதூர் அருகே ஆடுதுறையில் திருவிடைமருதூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காரைக்காலில் இருந்து 110 பாண்டிச்சேரி மாநில மது பாட்டில்களை இரு சக்கர வாகனத்தில் கடத்தி வந்த கோவிந்தபுரம், புது தெருவை சேர்ந்த பழனி மகன் பாபு (29) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் 110 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, திருவிடைமருதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புதுவை மாநில மதுபாட்டில் கடத்தியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Puduwa ,Thiruvidaimarudur ,Puduvai ,Tiruvidaimarudur ,Aduthurai ,Karaikal ,State ,
× RELATED ஏனாநல்லூர் நோய், பூச்சி தாக்கப்பட்ட...