×

பெஞ்சல் புயல் உருவான நிகழ்வும் கடந்து வந்த பாதையும்

கடந்த வாரத்தில் நவம்பர் 21ம் தேதி தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் 0.9 கிமீ உயரத்தில் கடல் மட்டத்தில் ஒரு காற்று சுழற்சி உருவானது. அது மேலும் வலுப்பெற்று சுமத்ரா தீவுக்கு அப்பால் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடலில் ஒரு வளி மண்டல மேல் காற்று சுழற்சியாக உருவானது. மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் 21 ம் தேதி காலை 8.30 மணி அளவில் குறைந்த வெப்பமண்டல மட்டத்தில் கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் வரை நீடித்தது.

நவம்பர் 22ம் தேதியில் வெப்பமண்டல அளவுகள், மற்றும் அதன் பலம் மற்றும் ஆதரவுடன் ஒரு குறைந்த அழுத்தப் பகுதி உருவானது. நவம்பர் 23ம் தேதி பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் 23 ஆம் தேதியும் மற்றும் 24ம் தேதியில் தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நன்கமைந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவானது. பின்னர் அது கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடல் மற்றும் அதே பகுதியில் நீடித்து, மேற்கு நோக்கி நகரத்தொடங்கியது.

வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடலில் 25ம் தேதி மாலை வந்தது. பின்னர் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, உள்முக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக குவிந்து, தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகள் மற்றும் அதை ஒட்டி பகுதிகளில் மையம் கொண்டிருந்தது. நவம்பர் 25ம் தேதி சென்னைக்கு தென்-தென்கிழக்கு, மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து 1130 கிமீ தொலைவில் நிலை கொண்டு இருந்தது.

26ம் தேதி திருகோணமலைக்கு தென்கிழக்கே 530 கி.மீ., நாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 810 கி.மீ., புதுச்சேரிக்கு தென்கிழக்கே கி.மீ. மற்றும் சென்னைக்கு தென்-தென்கிழக்கே 1000 கி.மீ. தொலைவில், வடமேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகராமல் வங்கக் கடலில் நிலை கொண்டது. பின்னர் அது மெல்ல நகர்ந்து திருகோணமலைக்கு தென்-தென்கிழக்கே சுமார் 340 கி.மீ, நாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 630 கி.மீ., புதுச்சேரியில் இருந்து 750 கி.மீ. தென்-தென்கிழக்கே, 830 கி.மீ. சென்னையின்; வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.

திருகோணமலைக்கு தென்கிழக்கே 310 கி.மீ, நாகப்பட்டினத்திலிருந்து 590 கி.மீ தென்-தென்கிழக்கே, 710 கி.மீ. புதுச்சேரிக்கு தென்கிழக்கேயும், சென்னைக்கு தென்-தென்கிழக்கே 800 கி.மீட்டரும் வட-வடமேற்கு நோக்கி 27ம் தேதி காலையில் நகர்ந்து வந்ததுடன் அங்கும் இங்கும் நகர்ந்து, குறிப்பாக வேதாரண்யத்துக்கு கிழக்கே 310 கிமீ தொலைவுக்கு வந்தது. அதற்கு பிறகு 340 கிமீ தொலைவுக்கு விலகிப் போனது. அதன் பிறகும் 390 கிமீ தொலைவுக்கும் இன்னும் தள்ளிப் போனது. 28ம் தேதி காலை 9 மணி அளவில் வேதாரண்யத்துக்கு 390 கிமீ தொலைவில் நிலை கொண்டு காலை 9 மணி முதல் 11 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், வட பகுதியில் இருந்து வரும் குளிர் அலைகள் காரணமாக தமிழக கடலோரப் பகுதிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நெருங்கி வருவதில் தாமதம் ஏற்பட்டது. காற்றின் திசை வேகம் காரணமாக அது மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே நகரத் தொடங்கியது. குறிப்பாக மணிக்கு 3 கிமீ வேகத்தில் பயணிக்கத் தொடங்கியது. இது 28ம் தேதி மதிய நிலவரப்படி இலங்கை- திரிகோண மலைக்கு கிழக்கு- வட கிழக்கே110 கிமீ தொலைவிலும், நாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 310 கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கு தென் கீழக்கே 410 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கே 480 கிமீ தொலைவிலும்நிலை கொண்டு இருந்தது.

பின்னர் அது வடக்கு – வட மேற்கு திசையில் இலங்கை கடலோரப் பகுதியை ஒட்டி நகரத் தொடங்கியது. இப்படி கிழக்கு, வடக்கு, வட மேற்கு திசையில் அங்கும் இங்கும் போக்குக் காட்டி மெல்ல வலுவிழக்கத்தொடங்கியது. இருப்பினும், 29ம் தேதியில் வடக்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக- புதுச்சேரி கடலோரப் பகுதிக்கு நெருங்கி வந்து தற்காலிக புயலாக மாறியது. அன்று இரவு 8.30 மணி முதல் 11.30 மணி வரையிலான நேரத்தில், அது கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. ஆனால் அறிவித்தபடி புயல் கரையைக் கடக்க முடியாமல் அதே இடத்தில் நிலை கொண்டு இருந்தது.

மரக்காணம் பகுதியில் அதிகரித்து இருந்த கடல் நீரோட்டம் புயலின் கால்பகுதியை பிடித்து கடலுக்குள் இழுத்தது. அதனால் புயல் கரை கடப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பொதுவாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைவதற்கு வளி மண்டலத்தின் கீழ் பகுதியில் காற்று குவிதல், மேல் பகுதியில் காற்று விரிவடைதல் போன்ற பல்வேறு நிகழ்வின் காரணமாக புயலாக மாறுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக 26 மற்றும் 27ம் தேதிகளில் நல்ல காற்றின் பகுதி வளி மண்டல கீழ்ப்பகுதியில் காற்று குவிவதற்கான சூழ்நிலை இருந்தது. ஆனால் 27ம் தேதி முதல் காற்று குவிதல் என்பது குறைந்துள்ளது.

28ம் தேதியில் வளி மண்டல மேலடுக்கில் காற்று விரிவடைவது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டு இருந்தது. மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு 27ம் தேதியில் 13 கிமீ வேகத்தில் இருந்தது. புயல் நகரும் போது இதுபோல வேகம் குறைந்ததால் 27ம் தேதியில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கில் இருந்து மேற்காக நகர்ந்து செல்லும் வெப்ப அலையுடனும், மேற்கில் இருந்து கிழக்காக வீசும் காற்று மற்றும் இலங்கைக்கு அருகில் இருக்கும் போது ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு மண்டலத்தை நோக்கி செல்லக்கூடிய காற்றின் போக்கு, நிலப்பகுதியுடன் உறாய்வு ஏற்படுவதால் ஏற்பட்ட மாற்றங்கள் ஒருபுறத்திலும், மேலும், வட திசையில் அது நகர முடியாத அளவுக்கு இரண்டு எதிரெதிர் திசையில் காற்றின் போக்கு இருந்த காரணத்தால் நகர்வின் வேகம் குறைந்து இருந்தது.

இதுபோன்ற காரணங்களால் புயலாக வலுப்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் அது 29ம் தேதியில் தற்காலிக புயலாக மாறியது. புயல் கரையைக் கடந்த 29ம் தேதி இரவு முதல் 30ம் தேதி வரை மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக மயிலம் பகுதியில் வரலாறு காணாத அளவுக்கு 510 மிமீ மழை பெய்தது. புதுச்சேரியில் 400 மிமீ முதல் 490 மிமீ வரை மழை கொட்டியது. டிசம்பர் 1ம் தேதியில் அதிகபட்சமாக ஊத்தங்கரையில் 500 மிமீ மழை கொட்டித் தீர்த்தது.

* நவம்பர் மாத இயல்பு மழை
வட கிழக்கு பருவமழை அக்டோபர் 20ம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் இறுதி வரை தமிழகத்தில் பெய்வது வழக்கம். அக்டோபர்- நவம்பர் மாதங்களில் இயல்பாக தமிழகத்தில் 362 மிமீ மழை பெய்வது வழக்கம். ஆனால் தற்போது அக்டோபர் 1ம் தேதி தொடங்கி நவம்பர் டிசம்பர் 2ம் தேதி வரை தமிழகத்தில் 429 மிமீ வரை மழை பெய்துள்ளது. இது இயல்பு மழையின் அளவைவிட 18 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணக்கிட்டுள்ளது.

The post பெஞ்சல் புயல் உருவான நிகழ்வும் கடந்து வந்த பாதையும் appeared first on Dinakaran.

Tags : Cyclone Benjal ,South East Bay of Bengal ,Sumatra ,Indian Ocean ,
× RELATED தனுஷ்கோடியில் மணல் புயல்: காற்றின்...