×

சூரத் பா.ஜ மகளிரணி தலைவி திடீர் தற்கொலை

சூரத்: குஜராத் மாநிலம் சூரத் பகுதி பா.ஜ பெண் தலைவர் தீபிகா படேல்(34). பா.ஜ மகளிர் அணி தலைவியாக இருந்தார். அவருக்கு கணவர் மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் அவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த அந்த பகுதி தொழிலதிபர் சிராக் சோலங்கி, தீபிகாவின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பிரேதபரிசோதனையில் தூக்கில் தொங்கியதுதான் சாவுக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. அவர் தற்கொலை செய்த போது வீட்டில் இருந்த தொழிலதிபர் சிராக் சோலங்கியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் தீபிகாவை சகோதரி போல் கருதுவதாக தெரிவித்துள்ளார். இதுபற்றி மேலும் விசாரணை நடந்து வருவதாக சூரத் பகுதி மூத்த போலீஸ் அதிகாரி விஜய் சிங் குர்ஜார் கூறினார்.

The post சூரத் பா.ஜ மகளிரணி தலைவி திடீர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Surat ,Deepika Patel ,BJP ,Gujarat ,BJ ,
× RELATED குஜராத் மாநிலம் சூரத் அருகே ரயில் தடம் புரண்டு விபத்து