×

மனைவி மாயம்: கணவர் புகார்

 

ஈரோடு,டிச.2: கொடுமுடி தளுவம்பாளையம் மகுடபதி சமுதாய சாலை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (47). மெக்கானிக். இவருக்கு பிரேமலதா (44) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். பிரேமலதா வீட்டில் இருந்து கொண்டு ஆன்லைனில் வியாபாரம் செய்து வந்தார். கடந்த 29ம் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியேறிய பிரேமலதா மீண்டும் வீடு திரும்பவில்லை.அக்கம்பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து செந்தில்குமார் கொடுமுடி போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பிரேமலதாவை தேடி வருகின்றனர்.

The post மனைவி மாயம்: கணவர் புகார் appeared first on Dinakaran.

Tags : Erode ,Senthilkumar ,Makudapati Community Road ,Kodumudi Thaluwampalayam ,Premalatha ,Dinakaran ,
× RELATED ஈரோட்டில் மது போதையில் ஓட்டி வரப்பட்ட...