- முதல்வர் மருந்தகம்
- திருவள்ளூர்
- திருவள்ளூர் மண்டல கூட்டுறவு சங்கங்கள்
- கூட்டு இயக்குனர்
- டி.சண்முகல்லி
- முதல் அமைச்சர்
- மருந்தகம்
- தின மலர்
திருவள்ளூர், நவ. 30: திருவள்ளூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் தி.சண்முகவள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.ஃபார்ம், டி.ஃபார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில் முனைவோர் இன்று வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது பொதுமக்கள் நலன் கருதி வரும் டிசம்பர் மாதம் 5ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்,
The post முதல்வர் மருந்தகத்துக்கு விண்ணப்பிக்க தேதி நீடிப்பு appeared first on Dinakaran.