அம்பத்தூர், நவ.30: அமைந்தகரை பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் அமைந்தகரை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தி.நகர் பகுதியில் தங்கி, சி.ஏ படித்து வந்தேன்.திருமுருகன் (36) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர், என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளுமாறும் டார்ச்சர் செய்து வந்தார். இதனால் வீட்டை காலி செய்துவிட்டு, அமைந்தகரையில் தாய், தந்தையுடன் வசித்து வருகிறேன். இங்கும் வந்து திருமணம் செய்ய சம்மதிக்கும்படி டார்ச்சர் செய்தார். எனவே, கோடம்பாக்கம் உறவினர் வீட்டிற்கு வந்தும் தொல்லை கொடுத்து வருகிறார். மேலும், திருமணம் செய்து கொள்ள மறுத்தால், உனது முகத்தில் ஆசிட் வீசிவிடுவேன் என மிரட்டுகிறார். எனவே, திருமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஆசிட் வீசுவதாக பெண்ணுக்கு மிரட்டல் appeared first on Dinakaran.