திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே, மத்தூர் காந்தி தெருவைச் சேர்ந்தவர் சாந்தி (65). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவர் பத்மநாபன் இறந்து விட்ட நிலையில் சாந்தியின் 2 மகன்களும் சிங்கப்பூர் மற்றும் சென்னையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கிராமத்தில் உள்ள வீட்டில் சாந்தி மட்டும் தனியாக வசித்து வருகிறார். சாந்தி, சென்னையில் பணியாற்றி வரும் தனது மகனை பார்க்க கடந்த 16ம் தேதி சென்றிருந்தார்.
பின்னர், நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பிய சாந்தி வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 8 சவரன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம், வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தன. இது தொடர்பாக திருத்தணி காவல் நிலையத்தில் சாந்தி புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வீட்டு கதவை உடைத்து நகை, பணம் திருட்டு appeared first on Dinakaran.