தாம்பரம்: தாம்பரம் ரயில் நிலையத்தில், பொதுமக்களின் அவசர உதவிக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 108 ஆம்புலன்சில், மருத்துவ உதவியாளராக பணியாற்றி வருபவர் தேவா (25). இவர், தாம்பரம் பேருந்து நிலையம் அருகே கடந்த 26ம் தேதி நடந்து சென்றபோது, மர்ம நபர் ஒருவர், செல்போனை பறிக்க முயன்றுள்ளார். இதை தேவா தடுத்ததால், ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர், மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து தேவாவின் முகத்தில் வெட்டிவிட்டு அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பர்சை பறித்து சென்றார்.
படுகாயமடைந்த தேவாவை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது முகத்தில் 9 தையல் போடப்பட்டது. இதுகுறித்து தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த ஜின்சீர் (22) என்பது தெரிந்தது. அவரை நேற்று கைது செய்தனர். இவர் மீது திருப்பூர், கோயம்புத்தூர், மறைமலைநகர் காவல் நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் உள்ளது தெரிய வந்தது.பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post ஆம்புலன்ஸ் ஊழியரை வெட்டியவர் கைது appeared first on Dinakaran.