- ஆந்திரப் பிரதேசம்
- திருவள்ளூர் மாவட்டம்
- சமாஜ்வாடி
- சினிவாச பெருமாள்
- தமிழ் அரசு
- ஆந்திர
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஓத்துக்கோட்டை
- தின மலர்
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே, ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான குட்கா, கூல் லிப் உள்ளிட்டவை மூட்டைமூட்டையாக மினிவேனில் தமிழகத்திற்கு கடத்தப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், எஸ்பியின் தனிப்படை எஸ்.ஐக்கள் மகாலிங்கம், குமார் தலைமையிலான போலீசார் நேற்று காலை ஊத்துக்கோட்டை அருகே, போந்தவாக்கம் கிராமத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த மினி வேனை தனிப்படையினர் சோதனை செய்தனர். அதில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. மினி வேனில் குட்கா கடத்தி வந்த சென்னை நெசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் முத்துகிருஷ்ணன் (24) என்பவரை கைது செய்த போலீசார், ஒரு டன் எடை கொண்ட ரூ.25 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களையும், மினி வேனையும் பறிமுதல் செய்து பென்னாலூர் பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். முத்துக்கிருஷ்ணனை ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post ஆந்திராவில் இருந்து கடத்தப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள ஒரு டன் குட்கா பறிமுதல்: சென்னை வாலிபர் கைது appeared first on Dinakaran.