- தலைமை பதிவாளர்
- திருப்பலுக்கன்ரம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- எம். ஸ்டால்
- திருக்கழுக்குன்றம்
- திருக்கழுக்குன்றம்
- ஐயா
- முதல்வர்
- தின மலர்
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் ரூ.1.75 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தினை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். திருக்கழுக்குன்றம் சார் பதிவாளர் அலுவலகம் கடந்த 1910ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான கட்டிடத்தில், எந்தவித அடிப்படை வசதியுமின்றி இயங்கி வந்தது. இந்த, அலுவலகத்தினை நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டுமென்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையின்படி, புதிய கட்டிடம் கட்டுவதற்கு, அரசு சார்பில் ரூ.1 கோடியே 75 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, புதியதாக சார் பதிவாளர் அலுவலகம் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. அதன்படி, ரூ.1.72 கோடி செலவில் புதியதாக கட்டப்பட்ட சார் பதிவாளர் அலுவலக கட்டிடத்தினை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, குத்துவிளக்கேற்றி அலுவலக பணி துவக்கி வைக்கும் விழா திருக்கழுக்குன்றத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு திருக்கழுக்குன்றம் பேரூராட்சி மன்ற தலைவர் ஜி.டி.யுவராஜ் தலைமை தாங்கினார். திருக்கழுக்குன்றம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.டி.அரசு, பதிவுத்துறை துணை தலைவர் ராஜ்குமார், செங்கல்பட்டு மாவட்ட பதிவாளர் புனிதா, திருக்கழுக்குன்றம் சார் பதிவாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்எல்ஏ வீ.தமிழ்மணி கலந்துகொண்டு, புதிய சார் பதிவாளர் அலுவலகத்தினை குத்து விளக்கேற்றி, அலுவலக பணியை தொடங்கி வைத்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், ஒன்றிய குழு துணை தலைவர் பச்சையப்பன், திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் பழனி, தேன்மொழி இளங்கோ, தலைமை பொதுக்குழு உறுப்பினர் செல்வக்குமார், முன்னாள் கவுன்சிலர் விவேகானந்தன், திமுக நிர்வாகிகள் செங்குட்டுவன், சரவணன், அரி தினேஷ், புல்லேரி ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post திருக்கழுக்குன்றத்தில் ரூ.1.75 கோடி மதிப்பில் புதிதாக சார் பதிவாளர் அலுவலகம்: காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.