- பொங்கல்
- க. வெங்கடேசன் எம். பி.
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ICAI
- இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம்
- கணக்காளர்கள்
- தின மலர்
சென்னை: பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி கள் மாற்றி அமைக்கப்பட்டி ருக்கின்றன. தமிழ்நாட்டின் எதிர்ப்புக்கு பணிந்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய பட்டயக்கணக்காளர்கள் நிறுவனம் எனப்படும் ஐசிஏஐ அமைப்பு பட்டய கணக்காளர் களுக்கான முதல் நிலை தேர்வு அட்டவணையை அண்மையில் வெளியிட்டது. அதில் ஜனவரி 12 முதல் 18 வரை 4 தாள்களுக்கு தேர்வுகள் நடைபெறும் என்றும் பொங்கல் திருநாளான ஜனவரி 14ஆம் தேதி பிஸ்னஸ் சட்டம் தேர்வும், உழவர் திருநாளான ஜனவரி 16 ஆம் தேதி திறனறிவு தேர்வும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பொங்கல் திருநாளன்று தேர்வுகள் நடத்துவது தமிழ் பண்பாட்டை அவமதிக்கும் செயல் என மதுரை மார்க்சிஸ்ட் எம்.பி சு. வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து திமுக, மார்க்சிஸ்ட், மதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளும் சி.ஏ. தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதிலும் மொழி பிரச்சினையை எதிர்க்கட்சிகள் பிரச்சாரமாக கொண்டு வருகின்றன என்றும் எப்போது பார்த்தாலும் தமிழ் விரோதி பிரச்சாரம் சிலருக்கு பழக்கமாகிவிட்டது என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜனவரி 14 ஆம் தேதி பொங்கலன்று நடைபெற இருந்த சி.ஏ. தேர்வு தேர்வு 16ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடும் கண்டனம் எழுந்ததை அடுத்து தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளது. இதனிடையே சி.ஏ. தேர்வுகள் தேதியை மாற்றியதற்கு மார்க்சிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
The post பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்: சு.வெங்கடேசன் எம்.பி. நன்றி appeared first on Dinakaran.