×
Saravana Stores

பழங்குடியினர் நலத்துறை சார்பில் தொல்குடியினர் தின சிறப்பு முகாம்

 

பந்தலூர், நவ.26: பந்தலூர் அருகே எருமாடு மணல் கொல்லி பகுதியில் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது.  நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே மணல் கொல்லி சமுதாயக்கூடத்தில் நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தேசிய தொல்குடியினர் தின சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு பழங்குடியினர் நலத்துறை தனி வட்டாட்சியர் நடேசன் தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் சத்திவேல் மற்றும் மாவட்ட தொழில் மைய அலுவலர் ஆகியோர் கலந்துகொண்டு பழங்குடியினர் மக்களின் குறைகளை கேட்டறிந்து, பழங்குடியினர் மக்கள் தங்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் ஆதார் அட்டையில் பெயர் சேர்த்தல், வாக்களர் பட்டியளில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, அதிகாரிகள் விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இம்முகாமில் துணை வட்டாட்சியர்கள் பொன்னரசு, ரமேஷ் மற்றும் விஏஓ அசோக்குமார் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். முகாமில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர்.

The post பழங்குடியினர் நலத்துறை சார்பில் தொல்குடியினர் தின சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Tribal Welfare Department ,Tolkudinar Day ,Bandalur ,Erumadu Sandal Kolli ,Nilgiri District ,Sandal ,Kolli Community Center ,Adi ,Dravidar ,Tribal Welfare Department National ,
× RELATED பழங்குடியினர் மக்களுக்கு அடையாள அட்டை: காஞ்சி கலெக்டர் வழங்கினார்