- மாவட்ட கலெக்டர்
- கோத்தகிரி
- கோத்தகிரி வருவாய் கோட்ட அலுவலகம்
- தஞ்சாவூர்
- ரமணி
- மல்லிபட்டினம்
- மாவட்ட சேகரிப்பாளர்கள்
- தின மலர்
கோத்தகிரி, நவ.22: தஞ்சாவூரில் ஆசிரியை படுகொலை செய்ததை கண்டித்து கோத்தகிரி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து ஆசிரியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தஞ்சாவூரில் மல்லிப்பட்டினத்தில் உயர்நிலைப்பள்ளி ஆசிரியை ரமணி படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து கோத்தகிரி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து ஆசிரியர் சங்கங்கள் மூலம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும், குறிப்பாக தமிழ்நாடு அரசு ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு ஆணையை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கைகளை எழுப்பினர்.
இதில் தமிழ்நாடு ஆரம்பபப்ள்ளி ஆசிரியர் கூட்டணி நீலகிரி மாவட்ட செயலாளர் ஜெயசீலன், வட்டார தலைவர் ரவிக்குமார், வட்டார செயலாளர் ஆனந்தன், கல்வி மாவட்ட செயலாளர் வசந்தகுமார் மற்றும் உறுப்பினர்கள், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் வேல்முருகன், வட்டார செயலாளர் ராஜேந்திரன், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சரவணன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
The post ஆசிரியை படுகொலை கண்டித்து கோத்தகிரியில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.