- செஞ்சிலுவை சங்கம்
- நீலகிரி மாவட்ட செஞ்சிலுவை சங்கம்
- மாரிஸ் சாண்டா குரூஸ்
- இந்திய செஞ்சிலுவைச் சங்கம்
- நிலை
- தலை
- தின மலர்
ஊட்டி.நவ.23: நீலகிரி மாவட்ட செஞ்சிலுவை சங்க செயலாளர் மோரீஸ் சாந்தா குரூஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்திய செஞ்சுலுவை சங்க மாநில தலைமை, நீலகிரி மாவட்ட ெசஞ்சிலுவை சங்கத்திற்கு நடமாடும் மருத்துவ வாகன சேவை வழங்கியுள்ளது.இச்சேவையில் பணியாற்ற மருத்துவர், செவிலியர், வாகன ஓட்டுநர் மற்றும் அலுவலக பணியாளர் பணிக்கு மூன்று ஆண்டுகள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படவுள்ளனர்.
மருத்துவர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் எம்பிபிஎஸ்., எம்டி., பிடிஎம்எஸ்., படித்திருக்க வேண்டும். மாதம் ரூ.64 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும். செவிலியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிஎஸ்சி., நர்சிங் பட்டம் பெற்றிருக்கு வேண்டும். செவிலியருக்கு மாதம் ரூ.20 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும். வாகன ஓட்டுநர்கள் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருத்தல் வேண்டும். மாதம் ரூ.20 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும்.
அலுவலக பணியாளர் கம்ப்யூட்டர் பட்டம் பெற்றிக்க வேண்டும்.மாதம் ரூ.15 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 45 வயது வரை இருத்தல் வேண்டும். விண்ணப்பங்கள் csrnodnlg@ircstnb.org என்ற மின்னஞ்சல் முகவரியில் மட்டுமே அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 27.11.2024. மேலும், விவரங்களுக்கு 94426 75508, 93601 01124 மற்றும் 79042 28459 என்ற செல்போன்றகளில் தொடர்பு கொண்டு அறிந்துக் கொள்ளலாம்.
The post செஞ்சிலுவை சங்கத்தில் பணியாற்ற மருத்துவர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு appeared first on Dinakaran.