- ரயில்வே பாதுகாப்பு படை
- திருச்சி
- மூத்த பிரிவு ஆணையர்
- அபிஷேக்
- உதவி ஆணையாளர்
- பிரமோத் நாயர்
- RPF,
- இன்ஸ்பெக்டர்
- செபாஸ்டியன்
- ரயில்வே துறை
- குட்டப்பட்டு நேரு நடுநிலைப்பள்ளி
- முத்துக்குளம்
- தின மலர்
திருச்சி, நவ.26: திருச்சி, ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் அபிஷேக் மற்றும் உதவி ஆணையா் பிரமோத் நாயர் ஆகியோர் உத்தரவின் பேரில், திருச்சி ஆர்பிஎப் இன்ஸ்பெக்டர் செபாஸ்டியன் தலைமையில் முத்துக்குளம், குட்டப்பட்டு நேரு நடுநிலைப் பள்ளியில் ரயில்வேத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் ரயில் தண்டவாளத்தை கடக்க வேண்டாம், ரயிலின் படியில் பயணம் செய்ய வேண்டாம், ஓடும் ரயிலில் நுழைய வேண்டாம், ஓடும் ரயில் பாதையில் நின்று புகைப்படம் எடுப்பது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம், ரயில் பாதையில் கல்லை வைக்கக்கூடாது.
இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் உயிருக்கு ஆபத்து ஏர்படும் வாய்ப்பு உள்ளது, ரயிலில் எளிதில் தீ பற்ற கூடிய பொருட்களை எடுத்து செல்ல கூடாது என்பன உள்ளிட்ட ரயில்வேதுறை மற்றும் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சுமார் 75 மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
The post ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு appeared first on Dinakaran.