×
Saravana Stores

ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை

 

திருச்சி, நவ.26: ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சையை ஊக்குவிக்கும் வகையில் நவ.21 முதல் டிச.4ம் தேதி வரை வாசக்டமி இருவார விழா-2024 கடைபிடிக்கப்படுகிறது. பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்களால் இக்கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

இச்சிகிச்சையானது அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மற்றும் BHEL மருத்துவமனையிலும் நடைபெறுகிறது. நவ.27ம் தேதி மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையிலும், நவ.28 மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனை, நவ.29 பிஎச்எல், டிச.2 ம் தேதி லால்குடி, டிச.3ம் தேதி ஸ்ரீரங்கம், டிச.4 ம் தேதி துறையூர், டிச.5ம் தேதி முசிறி அரசு மருத்துவமையிலும் நடைபெறுகிறது.

மேலும் நவீன ஆண் கருத்தடை சிகிச்சை முறையை ஏற்றுக்கொள்ளும் ஆண்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.1100ம், ஊக்குவிப்பாளர்களுக்கு ரூ.200ம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இச்சிகிச்சையானது ஓரிரு நிமிடங்களில் மயக்க மருந்து கொடுக்கப்படாமல் குடும்பநல கருத்தடை சிகிச்சை செய்யப்படும். சிகிச்சைக்கு பின்பு மருத்துவமனையில் தங்கவேண்டிய அவசியமில்லை.

சிகிச்சை முடிந்த பிறகு வீட்டிற்கு செல்லலாம். கத்தியின்றி. ரத்தசேதமின்றி, செய்யப்படும் இக்கருத்தடை சிகிச்சையால் பின் விளைவுகள் ஏதும் இருக்காது. எனவே, விருப்பமுள்ள ஆண்கள் நவீன குடும்பநல கருத்தடை செய்துகொண்டு பயன்பெறலாம் என துணை இயக்குநர் சாந்தி தெரிவித்துள்ளார். எனவே, விருப்பமுள்ள ஆண்கள் ஆதார் நகல் மற்றும் வங்கி கணக்கு எண் நகலுடன், 04312460695, 9443138139 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

The post ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Trichy ,Vasakdami ,
× RELATED தோட்டக்கலை பயிர் சாகுபடியாளர்கள்...