சென்னை: இந்திய அரசியலமைப்பின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு, இந்திய அரசியலமைப்பின் முகப்புரையை அனைத்து நீதிமன்றங்களிலும் இன்று வாசிக்க வேண்டும் என்று திமுக வழக்கறிஞர்களுக்கு சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக சட்டத்துறை செயலாளர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மக்களாட்சி தத்துவத்தின் மாண்பினை உள்ளடக்கிய இந்திய திருநாட்டினை வளமான பாதையில் முன்னெடுத்துச் செல்லும் ஓர் உன்னத உருவாக்கம், அண்ணல் அம்பேத்கர் வடிவமைத்து தந்த நமது அரசியலமைப்புச் சட்டமாகும்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75வது ஆண்டினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் இன்று காலை 11 மணிக்கு நமது அணியின் நிர்வாகிகள் மாவட்ட நீதிமன்றங்கள் மட்டும் இல்லாமல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர் அணி நிர்வாகிகள், அவர்கள் பணி செய்யும் இடங்களில் அங்கு இருக்கும் திமுக வழக்கறிஞர்கள் மற்றும் பொதுவான வழக்கறிஞர்கள் அனைவரையும் அழைத்து அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்புரையை முதலில் தமிழிலும் பிறகு ஆங்கிலத்திலும் வாசித்து சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும். இந்த அரசியல் அமைப்பின் முகப்புரை வாசிக்கும் நிகழ்ச்சியை அனைத்து நீதிமன்றங்களிலும் சரியாக காலை 11 மணிக்கு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post நாளை 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்திய அரசியலமைப்பின் முகப்புரையை அனைத்து நீதிமன்றங்களிலும் வாசிக்கவும்: வக்கீல்களுக்கு திமுக சட்டத்துறை வேண்டுகோள் appeared first on Dinakaran.