நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை, கடந்த 4 நாட்களாக தினமும் 5 காசுகள் வீதம் உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில், என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ், நேற்றும் முட்டை விலையில் மாற்றம் செய்தார். முட்டை விலையில் மேலும் 5 காசுகள் உயர்த்தி, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 565 காசாக நிர்ணயம் செய்தார். பிற மண்டலங்களில் முட்டையின் விலை தினமும் உயர்த்தப்பட்டு வருவதால், அதை பின்பற்றி நாமக்கல் மண்டலத்திலும் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.அதே சமயம், பல்லடத்தில் கறிக்கோழியின் பண்ணை கொள்முதல் விலை ரூ.73 ஆக தொடர்ந்து வருகிறது.
The post முட்டை விலை உயர்வு ரூ.565 காசாக நிர்ணயம் appeared first on Dinakaran.