×
Saravana Stores

சென்னையில் 27, 28-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; நாளை 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: பாலசந்திரன் பேட்டி

சென்னை: சென்னையில் 27, 28-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதால் இன்று இரவு முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாகைக்கு தென்கிழக்கே 880 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 1050 கி.மீ., புதுச்சேரிக்கு தென்கிழக்கே 980 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இலங்கை மற்றும் தமிழ்நாடு கடற்கரையை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரக் கூடும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறுமா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதனால் வடதமிழக கடலோர மாவட்டங்களில் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

விழுப்புரம், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நவ.28-ம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் 27, 28-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மீனவர்கள் 5 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம். கடற்பகுதிகளில் 55 முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று கூறினார்.

The post சென்னையில் 27, 28-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; நாளை 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: பாலசந்திரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Balachandran ,Meteorological Centre South ,Zone ,Bengal Sea ,
× RELATED காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய...