- வட கிழக்கு
- முதல்வர்
- ஸ்டாலின்
- கடலூர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வட கிழக்கு
- துணை தலைமை உதவி செயலாள
- தின மலர்
கடலூர் :கடலூரில் இன்று மாலை ஆய்வுக் கூட்டத்திற்கு அனைத்து துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனிடையே தமிழகத்துக்கு பலத்த மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்காக அவசர ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கடலூர் ஆய்வை ரத்து செய்து சென்னை புறப்பட்டார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்; மழையை எதிர் கொள்ள எப்போதும் தயாராக இருக்கிறோம். இயற்கையை கட்டாயம் சமாளிப்போம். மழை அதிகமாக வர உள்ள மாவட்டங்களில் அந்தந்த அமைச்சர்கள் தயார் நிலையில் உள்ளனர்,”இவ்வாறு தெரிவித்தார். மேலும் உதயநிதியிடம் அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் மோதல் குறித்து கேட்டபோது, எங்களது நிகழ்ச்சியில் பிசியாக இருக்கிறேன் மோதல் குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார்.
The post வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.