- சிப்பாய்
- காரைக்குடி
- செந்தில்குமார்
- கருவிப்பட்டி
- காரைக்குடி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி
- கோவா
- முத்துமாரியம்மன்
*இரண்டு பேர் கைது
காரைக்குடி : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கருவியப்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார். கோவையில் நகை அடகுகடை நடத்தி வருகிறார். இவரது தந்தை அங்குள்ள முத்துமாரியம்மன் கோயில் நிர்வாகியாக உள்ளார். கோயிலுக்கு சொந்தமான நகை மற்றும் வீட்டில் உள்ளவர்கள் நகைகளை கருவியப்பட்டியில் உள்ள வீட்டில் வைத்திருந்தனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் கடந்த 19ம் தேதி செந்தில்குமார் வீட்டு பீரோவை உடைத்து தங்கம், வைர நகையை திருடி சென்றனர். பள்ளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் சிசிடிவி கேமரா பதிவு மற்றும் பழைய குற்றவாளிகளை கண்காணித்து வந்தனர். சந்தேகத்தின் பேரில் அதேபகுதியை சேர்ந்த சுரேஷ் (33) என்பவரிடம் விசாரணை நடத்தினர். இதில் செந்தில்குமாரின் உறவினரான சுரேஷ், வீட்டை உடைத்து 103 சவரன் தங்கநகைகள் மற்றும் 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை எடுத்து சென்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
நகைகளை அதே பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் என்பவரிடம் அடகு வைத்துள்ளதாக தெரிவித்தார். திருடப்பட்ட அனைத்து பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். சுரேஷ் (33) மற்றும் நகையை அடகு வாங்கிய சோமசுந்தரம் (54) ஆகியோரை கைது செய்தனர்.
The post அடகுக்கடை உரிமையாளர் வீட்டில் கொள்ளை போன 103 பவுன் தங்கம், வைரம் பறிமுதல் appeared first on Dinakaran.