- மதுரை ஆதிமுக
- நெல்லா
- கும்பகோணம்
- கன்னியாகுமாரி
- ராஜு
- டாக்டர்
- சரவணன்
- மதுரை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- 2026 சட்டமன்றத் தேர்தல்
- ஆதிமுகா
- Velumani
- வரகூர் அருணாச்சலம்
- தின மலர்
மதுரை: தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது குறித்த கள ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நெல்லையில் கடந்த 22ம் தேதி நடந்த கள ஆய்வு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, வரகூர் அருணாசலம் ஆகியோர் முன்னிலையில், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான பாப்புலர் முத்தையா, மாவட்ட செயலாளர் தச்சை கணேசன் தரப்பினர் அடிதடியில் இறங்கினர்.
இதேபோல, அதே நாளில் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் நடந்த தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் கள ஆய்வுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, ஆர்.காமராஜ் மற்றும் முன்னாள் அரசு கொறடா மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது நகர்மன்ற முன்னாள் கவுன்சிலர் அம்பிகாபதி எழுந்து, மேடையில் தலைவர்கள் மட்டுமே பேசக்கூடாது, நிர்வாகிகளையும் பேச அனுமதிக்க வேண்டும் என்றார். அப்போது நிர்வாகிகள் பலர் மேடையில் ஏற முயன்றனர். அவர்களை மேடையில் இருந்தவர்கள் தடுத்து கீழே தள்ளியதால் அவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதேபோல கன்னியாகுமரியிலும் அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் அடிதடி ஏற்பட்டது.
மதுரையில் அடிதடி
மதுரை காமராஜர் சாலையில் உள்ள தொழில் வர்த்தக சங்க அரங்கில் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கள ஆய்வுக் கூட்டம் இன்று நடந்துது. மாநகர் மாவட்ட செயலாளர் செல்லூர் ராஜூ தலைமை வகித்தார். கூட்டத்தில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன், அமைப்புச் செயலாளர் செம்மலை உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் மாநில அமைப்புச் செயலாளர் செம்மலை, ‘மதுரை நகர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் வாரியாக நடந்த கட்சிப் பணிகள் குறித்தும், கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து பேசினார்.
அப்போது கூட்டத்தில் இருந்த மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணனின் ஆதரவாளர்களான ராமசுப்ரமணி, பைக்காரா செழியன் உள்ளிட்ட 5 பேர் எழுந்து கூச்சலிட்டவாறு, ‘மதுரை வடக்கு தொகுதியில் கட்சி பணிகள் எதுவும் முறையாக நடக்கவில்லை. வெற்றி வாய்ப்புள்ள தொகுதியில் கட்சியின் மாவட்ட செயலாளரான மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ கட்சிப் பணிகளில் எந்த வித ஆர்வமும் செலுத்தவில்லை. வேண்டுமென்றே புறக்கணிக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர் என சரமாரியாக குற்றம்சாட்டிக் கொண்டிருந்தனர். அப்போது மேடைக்கு முன் வரிசையில் அமர்ந்திருந்த செல்லூர் ராஜூ ஆதரவாளர்கள் ராமசுப்ரமணி, செழியன் உள்ளிட்டோரை சரமாரியாக அடிக்கத் தொடங்கினர்.
இதனால், கள ஆய்வுக் கூட்டம் கலவர கூட்டமானது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் கைகளால் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அப்போது கூட்டத்தில் இருந்த பெண்கள் உள்ளிட்டோர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால், கூட்டம் நடந்த பகுதி முழுவதும் கலவர பூமியாக காட்சியளித்தது. மேடையில் இருந்த நத்தம் விஸ்வநாதன் மற்றும் செம்மலை ஆகியோர் மைக்குகளில் சண்டையை நிறுத்துமாறு கூறினர். ஆனாலும், கேட்காத கும்பல் தொடர்ந்து கைகலப்பில் ஈடுபட்டது. இதைப் பார்த்து மேடையில் இருந்த செல்லூர் ராஜூ தரப்பினர் கீழே இறங்கி வந்து சண்டையை தடுத்து விலக்கிவிட்டனர். இதனால் ்அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
The post நெல்லை, கும்பகோணம், கன்னியாகுமரியைத் தொடர்ந்து மதுரை அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் பயங்கர மோதல்: செல்லூர் ராஜூ-டாக்டர் சரவணன் ஆதரவாளர்கள் அடிதடி appeared first on Dinakaran.