×
Saravana Stores

போலி என்.ஆர்.ஐ சான்றிதழ் கொடுத்த மருத்துவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள மருத்துவ மாணவர் சேர்க்கை குழு பரிந்துரை..!!

சென்னை: போலி என்.ஆர்.ஐ சான்றிதழ் கொடுத்த மருத்துவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள மருத்துவ மாணவர் சேர்க்கை குழு பரிந்துரை செய்துள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கையின் ஒருபகுதியாக மாணவர்களின் சான்றிதழ்களை ஆய்வுக்குட்படுத்தி சரிபார்ப்பது வழக்கம். அவ்வாறு ஆவணங்களின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ததில் கடந்த வாரம் முதுநிலை மருத்துவ படிப்பில் 6 பேர் போலி என்.ஆர்.ஐ சான்றிதழ் வழங்கி பிடிபட்டிருந்த நிலையில் அதில் 3 பேருக்கு இடம் ரத்து செய்யப்பட்டிருந்தது.

போலியாக சான்றிதழ் அளித்த ஆறு மாணவர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு சட்ட ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆறு மாணவர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க காவல்துறையில் புகார் அளிக்கப்பட உள்ளது. மேலும் முதுகலை மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்க உள்ளது. இந்த இடங்களில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்த மருத்துவர்களில் 44 மாணவர்கள் போலியாக என்ஆர்ஐ சான்றிதழ் அளித்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு அனுப்பிய பொழுது அவர்கள் போலி என்ஆர்ஐ சான்றிதழ் அளித்துள்ளது உறுதி செய்யப்பட்டது. இதற்கான சட்ட நடவடிக்கையை மேற்கொள்வதற்காக மருத்துவ கல்வி இயக்குனரகம், முதுநிலை மருத்துவ சேர்க்கைக்குழு, சட்ட வல்லுநர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. போலியாக 44 பேர் சான்றிதழ் வழங்கி இருப்பவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதே போல் 44 பேரும் இளநிலை மருத்துவப்படிப்பில் எம்.பி.பி.எஸ் முடித்தவர்கள் என்பதன் காரணமாக குற்றவியல் நடவடிக்கையோ அல்லது மருத்துவ கலந்தாய்வின் மூலமாக சேரக்கூடிய ஒரு நிலையில் அவர்கள் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது சட்ட வல்லுனர்களின் பரிந்துரையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

The post போலி என்.ஆர்.ஐ சான்றிதழ் கொடுத்த மருத்துவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள மருத்துவ மாணவர் சேர்க்கை குழு பரிந்துரை..!! appeared first on Dinakaran.

Tags : Medical Admissions Board ,CHENNAI ,Medical Admission Board ,Dinakaran ,
× RELATED சென்னையில் மழைநீரை வெளியேற்ற குழாய் வடிகால்கள்