×
Saravana Stores

வயல்வழியாக உடலை சுமந்து செல்லும் அவலம் சுடுகாட்டிற்கு சாலை வசதி வேண்டும்

*கிராமமக்கள் கோரிக்கை

திருச்சுழி : நரிக்குடி அருகே சுடுகாட்டிற்கு பாதை வசதி இல்லாததால் வயல் வழியாக உடலை கொண்டு செல்கின்றனர். எனவே சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நரிக்குடி அருகே ஆதித்தனேந்தல் கிராமம் உள்ளது.

இக்கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்வதற்கு மயான வசதியில்லை என கூறுகின்றனர்.

இம்மயான வசதியின்றி திறந்த வெளியில் சடலங்களை எரியூட்டுவதாகவும், சடலங்களை கொண்டு செல்ல சரியான சாலை வசதில்லாமல் கரடு முரடான சாலைகளிலும், வயல் வெளிகளில் கொண்டு செல்லும் நிலையில் உள்ளதாக கூறுகின்றனர். நேற்று முன்தினம் ஆதித்தனேந்தலை சேர்ந்த ராமுத்தாய் (65) என்ற மூதாட்டி உடல் நலக்குறைவால் காலமானார்.

இதனையடுத்து உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் அவரது உடலை அடக்கம் செய்வதற்காக நேற்று சுடுகாட்டிற்கு தூக்கி சென்றனர். மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் விவசாயம் செய்துள்ள விளை நிலங்கள் வழியாக 2 கிமீ தூரம் சுமந்து சென்றனர். மக்களின் சிரமத்தை போக்க விரைவில் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஆதித்தனேந்தல் கிராமத்தினர் கூறுகையில், ஆதித்தனேந்தல் கிராமத்தில் பல வருடங்களாக மயானத்திற்கு செல்ல சாலை இல்லை. மேலும் மயானத்தில் அடிகுழாய் வசதி கூட இல்லாத நிலையில் இறந்தவர்களுக்கு இறுதி சடங்குகள் கூட செய்ய முடியாத நிலை உள்ளது. சுடுகாடு வரை குடங்களில் தண்ணீரை சுமந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டு வருகிறது.

சுடுகாட்டில் எரியூட்டும் தகன மேடையும் இல்லாததால் மழைக்காலங்களின் போது இறந்தவர்களின் உடல்களை எரியூட்டுவதில் சிரமம் உள்ளது. ஆகவே சுடுகாட்டிற்கு சாலைவசதி மற்றும் மேற்கூரையுடன் கூடிய எரியூட்டும் தகன மேடையும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வயல்வழியாக உடலை சுமந்து செல்லும் அவலம் சுடுகாட்டிற்கு சாலை வசதி வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Avalam ,Crematorium ,Thiruchuzhi ,Narikudi ,Adithanendal ,Narikkudi ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி அரசுக்கு பல லட்சம் வருவாய்...