×
Saravana Stores

வன்னியர்களுக்கு 10.50% உள்ஒதுக்கீட்டை அறிவிக்க முதல்வருக்கு ராமதாஸ் கடிதம்

சென்னை: தமிழ்நாடு முதல்வருக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாசு நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: வன்னியர்களுக்கு 10.50 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டப்பூர்வ பணிகள் தாமதமாகி வரும் நிலையில், அதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கான இயல்பான சூழல் உருவாகியிருப்பதை தங்களுக்கு சுட்டிக் காட்டுவதற்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க சட்டம் தடையாக இல்லை, விதிகள் தடையாக இல்லை, ஆட்சியாளர்களின் மனத்தடை மட்டும்தான் பெரும் தடையாக இருக்கிறது. எனவே, அந்தத் தடையை அகற்றி விட்டு, தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை இயற்றும் அறிவிப்பை வரும் 29ம் நாள் விழுப்புரத்தில் இட ஒதுக்கீட்டுப் போராட்ட ஈகியர்களின் மணிமண்டப திறப்பு விழாவில் தாங்கள் வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post வன்னியர்களுக்கு 10.50% உள்ஒதுக்கீட்டை அறிவிக்க முதல்வருக்கு ராமதாஸ் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Ramadoss ,Chief Minister ,Vanniyyas ,CHENNAI ,Tamil Nadu ,BMC ,Founder ,Ramadasu ,
× RELATED அனைத்து நியாயவிலைக் கடைகளிலும்...