- விஜய்
- தூத்துக்குடி
- Tamilisai
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பாஜக
- ஜனாதிபதி
- தமிழிசை சௌந்திரராஜன்
- தூத்துக்குடி விமான நிலையம்
- மகாராஷ்டிரா
- தமிழிசை கலை
தூத்துக்குடி: விவசாயிகளுக்கு நடிகர் விஜய் விருந்து கொடுத்தது சினிமா சூட்டிங்கா? என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜ முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நேற்று அளித்த பேட்டி: மகாராஷ்டிராவை பொறுத்தவரை நல்லாட்சிக்கும், நல்ல வளர்ச்சிக்கும் மக்கள் ஆதரவு கொடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் பிரதமரின் நல்ல திட்டங்களுக்கு மக்கள் ஆதரவு தரும் காலம் வெகு தொலைவில் இல்லை. 2026ம் ஆண்டு தேர்தல் எங்களுக்கு சாதகமாக இருக்கும்.
அதானி மீதான ஊழல் விவகாரத்தில் ஒன்றிய அரசு அதற்கான விளக்கத்தை கொடுத்து விட்டது. எந்த ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர் பிரதமர் மோடி தான். நடிகர் விஜய் கூட்டத்திற்கு இடம் கொடுத்த விவசாயிகள் எல்லோரையும் கூப்பிட்டு உணவு விருந்து கொடுத்து இருக்கின்றார். இனி யாரையெல்லாம் கூப்பிடுகிறார் என்று தெரியவில்லை.
இது சினிமா சூட்டிங்கா? அல்லது உண்மையான நடவடிக்கையா? என இனி பார்த்து தெரிந்து கொள்ளலாம். நடிகர் ரஜினிகாந்த் சில அரசியல் தலைவர்களை சந்திப்பதும் சில கருத்துக்களை தெரிவித்தும் வருகிறார். இதனால் அவர் மனதில் இன்னும் அரசியல் தாக்கம் உள்ளதோ என நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
The post நடிகர் விஜய் விருந்து சினிமா சூட்டிங்கா? தமிழிசை கலாய் appeared first on Dinakaran.