×
Saravana Stores

குற்றால அருவிகளில் தடையின்றி குளிக்க அனுமதி

தென்காசி: குற்றாலத்தில் ஒரு வாரத்திற்கு பிறகு கடந்த இரு தினங்களாக சுற்றுலாப் பயணிகள் தடையின்றி குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். 2 நாட்களாக மழை இல்லாத நிலையில், பகலில் வெயிலும் அவ்வளவாக இல்லை. வானம் மேகமூட்டமாகவே காணப்படுகிறது.

அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது. கடந்த ஒரு காலத்தில் 5 நாட்கள் பிரதான அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த இரு தினங்களாக அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.‌ விடுமுறை தினமான நேற்று சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. மெயினருவியில் மையப் பகுதிக்கு செல்ல முடியாதவாறு தடுப்புகள் வைத்து ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

 

The post குற்றால அருவிகளில் தடையின்றி குளிக்க அனுமதி appeared first on Dinakaran.

Tags : Koorala ,Tenkasi ,Courtalam ,
× RELATED நாசரேத்தில் 4 மாத கர்ப்பிணியான...