×
Saravana Stores

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளின் நீரிருப்பு 45.54%ஆக உள்ளது. மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில் தற்போது 5.354 டிஎம்சி நீரிருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் – 57.97%, புழல் – 70.85%, பூண்டி – 15.04%, சோழவரம் – 10.54% கண்ணன்கோட்டை – 60.6% உள்ளது.

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீரிருப்பு 2338 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீரிருப்பு 114 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீரிருப்பு 303 மில்லியன் கன அடியாக உள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6422 கன அடியிலிருந்து 6229 கன அடியாக சரிந்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 109.24 அடியாக சற்று உயர்ந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் மூலம் 600 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 77.33 டிஎம்சியாக உள்ளது

The post சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Boundi ,Chozhavaram ,
× RELATED சோழவரம் சர்வீஸ் சாலை பணிக்காக மண்டபம் இடிப்பு..!!