சென்னை: “தேர்வர்கள் தேர்வுக்கு கருப்புமைப்பேனாவை (black ink pen) (மையூற்று பேனா அல்லது பந்துமுனை பேனா அல்லது ஜெல்பேனா) மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
தேர்வர்கள் விடைப்புத்தகம் முழுவதும், அதாவது தேர்வு எண்ணை எழுதுதல், முதல் பக்கத்தில் கையொப்பமிடுதல், விடை எழுதுதல், படம் வரைதல், அடிக்கோடிடுதல், மேற்கோள்காட்டுதல், விடை புத்தகத்தில் பயன்படுத்தாத இடங்களை / தேவையான எண்ணிக்கைக்கு அதிகமான விடைகளை அடித்தல், போன்றவற்றுக்கு ஒரேவகையான கருப்புமைப்பேனாவை (மையூற்று பேனா அல்லது பந்துமுனை பேனா அல்லது ஜெல்பேனா) மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
தேர்வர்கள் மேற்கூறிய தேவைகளுக்கு ஒரேவகை கொண்ட கருப்புமைப்பேனாக்களை போதுமான எண்ணிக்கையில் வைத்திருக்க வேண்டும். தேர்வர்கள் கருப்புமைப்பேனாக்களைத் தவிர மற்ற பேனாக்களை உபயோகித்தால் அவர்களது விடைத்தாள் செல்லாததாக்கப்படும்” என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
The post தேர்வர்கள் தேர்வுக்கு கருப்புமைப்பேனாவை மட்டுமே உபயோகிக்க வேண்டும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.