×
Saravana Stores

திருச்செந்தூர் கோயிலில் யானை தாக்கி இறந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஆணை

சென்னை: திருச்செந்தூர் கோயிலில் யானை தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுக்கு குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிகையில்;

“தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர். அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள தெய்வானை என்ற யானையின் பாகன் உதயகுமார் மற்றும் அவருடன் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் 18-11-2024 அன்று யானையின் அருகில் இருந்தபோது யானை திடீரென திமிறி அருகில் இருந்த பாகன் உதயகுமார் மற்றும் சிசுபாலன் ஆகிய இருவரையும் தூக்கி வீசித் தாக்கியுள்ளது.

இதில், சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார் என்றும், பாகன் உதயகுமார் சிகிச்சை பலனின்றி மருத்துவனையில் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த உதயகுமார் மற்றும் சிசுபாலன் ஆகிய இருவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா இரண்டு இலட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

The post திருச்செந்தூர் கோயிலில் யானை தாக்கி இறந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஆணை appeared first on Dinakaran.

Tags : Tricendoor ,Chennai ,Chief Minister ,MLA ,Tiruchendur ,K. Stalin ,Thoothukudi District ,Thiruchendur ,Arulmigu Subramaniya Swami ,
× RELATED திருச்செந்தூர் கோயில் யானையை...