×
Saravana Stores

துணை முதல்வரிடம் திருமண அழைப்பிதழ்

கிருஷ்ணகிரி, நவ.23: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், வேப்பனஹள்ளி முன்னாள் எம்எல்ஏவுமான முருகனின் மகன் டாக்டர் அரவிந்த் திருமணம், வரும் டிசம்பர் 5ம் தேதி குந்தாரப்பள்ளி குமரன் மகாலில் நடைபெறுகிறது. திருமணத்தை தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், தலைமை வகித்து நடத்தி வைக்கிறார். இதையொட்டி, சென்னையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை, முன்னாள் எம்எல்ஏ முருகன், தனது மகன் அரவிந்துடன் சந்தித்து, திருமண அழைப்பிதழை வழங்கி வாழ்த்து பெற்றார். அப்போது, மாவட்ட பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட திமுக செயலாளர்கள் ஓசூர் பிரகாஷ் எம்எல்ஏ, பர்கூர் மதியழகன் எம்எல்ஏ ஆகியோர் உடனிருந்தனர்.

The post துணை முதல்வரிடம் திருமண அழைப்பிதழ் appeared first on Dinakaran.

Tags : Deputy Chief Minister ,Krishnagiri ,West District ,DMK ,Veppanahalli ,MLA ,Murugan ,Dr. ,Arvind ,Gundharappalli Kumaran Mahal ,Tamil Nadu ,Youth Secretary ,Dinakaran ,
× RELATED ராயபுரத்தில் மேம்பாலம்: துணை முதல்வரிடம் எம்எல்ஏ கோரிக்கை