×
Saravana Stores

எலிபேஸ்ட் சாப்பிட்ட 2 வயது குழந்தை சாவு

கிருஷ்ணகிரி, நவ.22: கிருஷ்ணகிரி அருகே, மாதேப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் சஷ்சிவன்(2). கடந்த 19ம் தேதி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, மறைவான இடத்தில் வைத்திருந்த எலிபேஸ்ட்டை மிட்டாய் என நினைத்து எடுத்து சாப்பிட்டுள்ளது. இதனால், சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளியபடி, குழந்தை மயங்கி விழுந்தான். இதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக குழந்தையை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு ெகாண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி, குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

The post எலிபேஸ்ட் சாப்பிட்ட 2 வயது குழந்தை சாவு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Venkatesan ,Mathepatti ,Shashivan ,
× RELATED கிருஷ்ணகிரி நகரில் சாலையோர கடைகளை...