- சூலகிரி
- தேவஸ்தானப்பள்ளி
- Pastalapalli
- கலிங்கவரம்
- பாரிசை
- கீரனப்பள்ளி
- சாமனப்பள்ளி
- புறம்தின்னா
- கேஎன் தொட்டி
- பி.எஸ்.திம்மச்சந்திரம்
- வெங்கடேசபுரம்
- நெரிகம்
- சின்னரதொட்டி
- Guruparapalli
- பன்னபள்ளி
- அத்திமுகம்
- உத்தனப்பள்ளி
- பெல்லாட்டி
சூளகிரி, நவ.21: சூளகிரி ஒன்றியத்திற்கு உள்பட்ட தேவஸ்தானப்பள்ளி, பஸ்தலப்பள்ளி, காளிங்காவரம், பேரிகை, கீரணப்பள்ளி, சாமனப்பள்ளி, புரம்தின்னா, கே.என். தொட்டி, பி.எஸ். திம்மசந்திரம், வெங்கடேசபுரம், நெரிகம். சின்னாரதொட்டி. பி.குருபரப்பள்ளி, பண்ணப்பள்ளி, அத்திமுகம், உத்தனப்பள்ளி, பெல்லட்டி, மற்றும் சுற்றுவட்டாரங்களில் விவசாயிகள் அதிக அளவில் காய்கறிகளை சாகுபடி செய்துள்ளனர்.
சொட்டுநீர் பாசனம், குடில் அமைத்தும், நேரடியாகவும் பந்தல் அமைத்து பீர்க்கங்காய் சாகுபடி செய்துள்ளனர். சமீபத்தில் பெய்த தொடர் மழைக்கு செடிகள் செழித்து வளர்ந்த நிலையில், தற்ேபாது கொடிகளில் பீர்க்கங்காய் விளைச்சல் அமோகமாக உள்ளது. இதையடுத்து விவசாயிகள் அறுவடை செய்து சூளகிரி, ஓசூர், கிருஷ்ணகிரி, பெங்களூரு, வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். இங்குள்ள மார்க்கெட்டில் பீர்க்கங்காய் கிலோ ₹30 முதல் ₹35 வரை விற்பனையாவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
The post பீர்க்கங்காய் விளைச்சல் அமோகம் appeared first on Dinakaran.