×
Saravana Stores

டெலி மெடிஷன் பயிற்சிக்கு மாற்றுத்திறனாளிகள் தேர்வு

செங்கல்பட்டு: பார்வைதிறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டெலி மெடிஷன் பயிற்சி வழங்குவதற்கு ஏதுவாக மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்திடும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நாளை மறுதினம் (25.11.2024) காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் 18 வயது முதல் 35 வயதுடைய ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். பயிற்சி காலம் 3 மாதம் தங்கும் வசதி, உணவு இலவசமாக வழங்கப்படும் மற்றும் உதவித்தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். தகுதியான அனைவரும் பங்கேற்று பயன்பெற மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்ராஜ், தெரிவித்துள்ளார்.

The post டெலி மெடிஷன் பயிற்சிக்கு மாற்றுத்திறனாளிகள் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Chennai ,
× RELATED செங்கல்பட்டு, மதுராந்தகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்