- திருப்பலுக்கன்ரம்
- திருக்கழுக்குன்றம்
- சகாயரோஜாஸ் நிவின்
- கல்லிக்குளம், திருநெல்வேலி மாவட்டம்
- தண்டரை கிராமம்
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே விடுதியில் தங்கியிருந்த பல் மருத்துவ மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம், கள்ளிகுளம் பகுதியை சேர்ந்தவர் சகாயரோஜஸ் நிவின் (23). திருக்கழுக்குன்றம் அடுத்த தண்டரை கிராமத்தில் உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரியில், இறுதியாண்டு பல் மருத்துவம் படித்து வந்தார்.
வழக்கம்போல், நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றுவிட்டு, விடுதிக்கு திரும்பிய சகாயரோஜஸ் நிவின், விடுதியில் தங்கியுள்ள சக நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி விட்டு மாலை மீண்டும் விடுதிக்கு திரும்பினர். பின்னர், இரவு அனைவரும் உணவருத்தி விட்டு தூங்க சென்றுள்ளனர். அனைவரும் தூங்கிய நிலையில், சகாயரோஜஸ் நிவின் தனது அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
இதனைகண்டு, அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள், உடனடியாக மயங்கியநிலையில் இருந்த சகாயரோஜஸ் நிவினை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த திருக்கழுக்குன்றம் போலீசார், பல் மருத்துவ மாணவன் சகாயரோஜஸ் நிவினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து சகாயரோஜஸ் நிவின் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post திருக்கழுக்குன்றம் அருகே சோகம் பல் மருத்துவ மாணவன் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.