- வருவாய்
- காஞ்சிபுரம்
- மாவட்ட வருவாய் அலுவலர்
- வெங்கடேஷ்
- விவசாயிகள் தீர்மான நாள்
- காஞ்சிபுரம்
- மாவட்ட சேகரிப்பாளர் அலுவலகம் வளாகம் மக்கள் உறவுகள் மையப்
- தின மலர்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், விவசாய பயனாளிகளுக்கு ரூ.6.22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில், வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் கலந்துகொண்டு, வேளாண்மை திட்டங்கள் தொடர்பாக அறிவுரைகள் விவசாயிகளுக்கு வழங்கினர். மேலும், விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறைசார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.
இதனையடுத்து, நேற்று நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், முத்தியால்பேட்டை கூட்டுறவு சங்கத்தின் மூலம் 6 விவசாய பயனாளிகளுக்கு 4 லட்சத்து 69 ஆயிரத்து 827 ரூபாய் மதிப்பீட்டில் பயிர்க்கடன்களும், விப்பேடு கூட்டுறவு சங்கத்தின் மூலம் 4 விவசாய பயனாளிகளுக்கு ரூ.1,44 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு கடன்களும், வேளாண்மை – உழவர் நலத்துறை மூலம் 5 விவசாய பயனாளிகளுக்கு 8 ஆயிரத்து 978 ரூபாய் மதிப்பிலான (பசுந்தாள் உர விதை, உளுந்து விதை) போன்ற வேளாண் இடுப்பொருட்களையும், 1 விவசாய பயனாளிக்கு இயற்கை விவசாய சான்றிதழ்களையும் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ, வேளாண்மை இணை இயக்குநர் (பொ) ராஜ்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சத்யா, அரசு அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார் appeared first on Dinakaran.