- சமாஜ்வாடி
- குன்னூர்
- ஜனாதிபதி
- திருப்பதி முர்மு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஊட்டி
- திருவாரூர்
- திருச்சி
- வெலிங்டன் இராணுவம்
- கலெக்டர்
குன்னூர்: ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாட்கள் அரசு முறை பயணமாக வரும் 27ம் தேதி தமிழ்நாடு வருகிறார். ஊட்டி, திருவாரூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். 28ம் தேதி குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி பெறும் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக நேற்று ராணுவ கல்லூரியில் பாதுகாப்பு குறித்து ராணுவ அதிகாரிகள் தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க சென்ற கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, எஸ்பி நிஷா மற்றும் அதிகாரிகளை உள்ளே விடாமல் ராணுவ வீரர்கள் கடும் வாக்குவாதம் செய்தனர். நீண்ட நேரமாக கல்லூரியின் நுழைவாயிலில் காத்திருக்க வைத்தனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு கலெக்டர் மற்றும் எஸ்பி இருவரை மட்டுமே அனுமதித்தனர்.
The post ஜனாதிபதி பாதுகாப்பு குறித்து ஆலோசனை கலெக்டர், எஸ்பிக்கு அனுமதி மறுப்பு appeared first on Dinakaran.