சென்னை: தமிழகத்தில் 2வது கட்டமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம் செய்ய இன்றும், நாளையும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும், சுமார் 68 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. இந்த சிறப்பு முகாமில் 18 வயது நிறைவடைந்தவர்கள் மற்றும் 18 வயதுக்கு மேல் இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் தங்களது பெயரை சேர்த்துக் கொள்ள விண்ணப்பம் அளிக்கலாம். அதேபோன்று பெயர் நீக்கம், திருத்தம் செய்யவும் விண்ணப்பம் பெறப்படும்.
The post வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்றும், நாளையும் சிறப்பு முகாம்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.