×
Saravana Stores

டாக்டர் பாலாஜி தாக்கப்பட்ட வழக்கு விக்னேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை கிண்டி மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவராக உள்ள பாலாஜியை கடந்த 13ம் தேதி அவரது அறையில் விக்னேஷ் என்ற வாலிபர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து விக்னேஷை போலீசார் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்னேஷ் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, மக்கள், நோயாளிகள் அதிகம் கூடும் மருத்துவமனைக்கு ஆயுதம் எடுத்து வந்து, தாக்குதல் நடத்தியுள்ளார். மருத்துவருக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. வழக்கறிஞர், மருத்துவர்கள் தொழில்சார்ந்தவர்கள். அதில் பிரச்னை ஏற்பட்டால் உடனே தாக்குதல் நடத்த முடியுமா, இந்த வழக்கில் விசாரணை நடந்து வருவதால் ஜாமீன் வழங்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விக்னேஷின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

The post டாக்டர் பாலாஜி தாக்கப்பட்ட வழக்கு விக்னேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Dr. ,Balaji ,Vignesh ,Madras Principal Sessions Court ,Chennai ,Gindi Hospital ,Chennai Principal Sessions Court ,Dinakaran ,
× RELATED சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மருத்துவர் பாலாஜி..!!