- மருத்துவமனை
- முதல்வர் பாலாஜி நாதன்
- தஞ்சாவூர்
- தஞ்சை கலெக்டர்
- பிரியங்கா பங்கஜ்
- வடகிழக்கு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன்
- வட கிழக்கு
- தின மலர்
தஞ்சாவூர், நவ.21: பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்கலாம் என தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும் கடந்த இரண்டு வாரமாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் வல்லம், திருவையாறு, பூதலூர், ஒரத்தநாடு, பாபநாசம், திருவிடைமருதூர், பேராவூரணி, பட்டுக்கோட்டை, கும்பகோணம் உள்பட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழை இருக்கும் பகுதிகளில் பள்ளியின் தலைமையாசிரியர்களே விடுமுறை அளிப்பது தொடர்பாக முடிவு எடுக்கலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
The post மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் தகவல் வடகிழக்கு பருவமழை இருப்பதால் பள்ளிக்கு விடுமுறை விடும் முடிவை தலைமை ஆசிரியர்களே எடுக்கலாம் appeared first on Dinakaran.