×

விவாகரத்து மனு நிலுவையில் இருக்கும்வரை கணவன் வீட்டில் மனைவிக்கு அனைத்து உரிமையும் உண்டு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: கேரளாவை சேர்ந்த இருதய நோய் நிபுணருக்கும், ஒரு பெண்ணுக்கும் 2008 செப்.15 அன்று கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றது. டாக்டருக்கு இது 2வது திருமணம். இந்த நிலையில் 2வது திருமணத்திலும் பிரச்னை ஏற்பட்டு 2019 மார்ச் 19 அன்று விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். விவாகரத்து மனு நிலுவையில் இருந்தபோது, ​சென்னை குடும்பநல நீதிமன்ற ம் ரூ.1.75 லட்சம் மாதம் தோறும் மனைவிக்கு வழங்க டாக்டருக்கு உத்தரவிட்டது.

இதை சென்னை உயர் நீதிமன்றம், ரூ.80 ஆயிரமாக குறைத்தது. இதை எதிர்த்து மனுதாரர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நேற்று கூறுகையில்,’ விவாகரத்து மனு நிலுவையில் இருக்கும் போது, ​​மனைவிக்கு, தனது திருமண வீட்டில் இருந்ததைப் போன்ற வாழ்க்கை வசதிகளைப் பெற உரிமை உண்டு. எனவே மனுதாரருக்கு மாதம் தோறும் தலா ரூ. 1,75,000 வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

The post விவாகரத்து மனு நிலுவையில் இருக்கும்வரை கணவன் வீட்டில் மனைவிக்கு அனைத்து உரிமையும் உண்டு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Kerala ,Dinakaran ,
× RELATED பாதிக்கப்பட்ட பெண்ணின் பாலியல்...