×

லால் சலாம் படத்தில் ரஜினியின் லுக் வெளியானது

சென்னை: லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த்தின் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கும் படம் லால் சலாம். இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா, செந்தில் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படம் கிரிக்கெட் பின்னணியில் உருவாகிறது. இதில் கவுரவ வேடத்தை ரஜினி ஏற்றிருக்கிறார். அதற்கான படப்பிடிப்புக்காக அவர் மும்பை சென்றுள்ளார். இந்நிலையில் படத்தில் அவரது தோற்றம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்பட்டது. தொப்பி அணிந்து, தாடி வைத்து ரஜினி நடந்து வரும் காட்சி அதில் இடம்பெற்றுள்ளது.

இதில் மொய்தீன் பாய் என்ற முஸ்லிம் கேரக்டரில் ரஜினி நடிக்கிறார். அந்த போஸ்டரில் மொய்தீன் பாய் ஆட்டம் ஆரம்பம் என்றும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக என்றும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. செஞ்சி மற்றும் அத்தியூர், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்தது. தற்போது மும்பையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

The post லால் சலாம் படத்தில் ரஜினியின் லுக் வெளியானது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Rajinikanth ,Chennai ,Aishwarya ,Vishnu Vishal ,Vikrant ,Jeevita ,Senthil ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா...