- காஞ்சி
- அமைச்சர்
- தமோ அன்பரசன்
- காஞ்சிபுரம்
- சீனிவாசன்
- கூவூர்
- காஞ்சிபுரம் மாவட்ட தொழில் மையம்
- காஞ்சிபுரம் மாவட்ட தொழில் மையம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட தொழில் மையம் மூலம் மானியத்துடன் கூடிய ஆட்டோவினை `நிறைந்தது மனம்’ திட்டத்தின் கீழ் கோவூரை சேர்ந்த சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட தொழில் மையம் மூலம் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் முன்னிலையில், மானியத்துடன் கூடிய ஆட்டோ சீனிவாசன் என்பவருக்கு வழங்கப்பட்டது.
அப்போது, “நிறைந்தது மனம்” திட்டத்தின் கீழ் சீனிவாசன் கூறுகையில்; “சீனிவாசன் ஆகிய நான் கோவூரில் வசித்து வருகிறேன். 35 வருடமாக ஆட்டோ ஓட்டி வருகிறேன், வாடகை ஆட்டோ ஓட்டி வந்த எனக்கு வருமானம் போதுமானதாக இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த சூழ்நிலையில், பல வங்கிகளில் சொந்த ஆட்டோ வாங்குவதற்கு கடன் பெற முயற்சித்தும் பலன் அளிக்கவில்லை. இதனால், கோவூர் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சரிடம் மனு வழங்கினேன். அம்மனுவின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, வங்கி மூலம் ரூ.3 லட்சம் கடன் வழங்கப்பட்டது. அதன்மூலம், ஆட்டோ ஓட்டி வரும் வருமானத்தில் வங்கி கடன் முழுவதும் செலுத்திவிட்டேன். தற்போது, வரும் வருமானத்தில் என் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறேன். வாடகை ஆட்டோ ஓட்டி வந்த என்னை ஆட்டோவின் உரிமையாளராக்கிய தமிழ்நாடு முதல்வருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார்.
The post காஞ்சியில் `நிறைந்தது மனம்’ திட்டத்தின் கீழ் பயனாளிக்கு மானியத்துடன் ஆட்டோ: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார் appeared first on Dinakaran.