×
Saravana Stores

உலக பாராம்பரிய வாரத்தையொட்டி இலவச அனுமதி புராதன சின்னங்களை காண மாமல்லபுரத்தில் குவிந்த மாணவர்கள்

மாமல்லபுரம்: உலக பாரம்பரிய வாரத்தையொட்டி, மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பார்க்க இலவச அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், பள்ளி மாணவ – மாணவிகள் உள்ளிட்ட பலர் குவிந்தனர். உலக பாரம்பரிய தினத்தையொட்டி, மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றிப்பார்க்க இலவசம் என அறிவிக்கப்பட்டதால், மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். காலையிலேயே கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில், மாலையில் பள்ளி மாணவ – மாணவிகள், உள்நாடு மற்றும் ஏராளமான வெளிநாட்டு பயணிகள் காணப்பட்டனர்.

உலகம் முழுவதும் உலக பாரம்பரிய வாரம் நவம்பர் 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், சுற்றுலா பயணிகள், பொதுமக்களிடையே தங்களது சமூக கலாச்சார பாரம்பரியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், பாரம்பரிய பெருமை கொண்ட இடங்களை பாதுகாக்கவும் அவற்றின் மீது அக்கறை கொள்ளவும் தூண்டுகிறது. இதையொட்டி, நேற்று சுற்றுலா பயணிகள் புராதன சின்னங்களை இலவசமாக சுற்றி பார்க்கலாம் என ஒன்றிய தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களை சுற்றி பார்க்க நேற்று ஏராளமான பயணிகள் குவிந்தனர். காலை 6 மணி முதலே இயற்கை காற்றை சுவாசித்தபடி புராதன சின்னங்களை கண்டு ரசித்தனர்.

கடற்கரை கோயில் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்களை பார்வையிட்டு அதன் முன்பு நின்று செல்பி மற்றும் குழுப் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். சிலர், குடும்பம் குடும்பமாக வந்து, தாங்கள் கொண்டு வந்த உணவை பரிமாறி மகிழ்ந்தனர். உலக பாரம்பரிய வாரத்தையொட்டி நேற்று புராதன சின்னங்களை சுற்றி பார்க்க இலவசம் என ஒன்றிய தொல்லியல் துறை அறிவிந்திருந்தது. இந்த, தகவலை 2 நாட்களுக்கு முன்னதாக தெரிவித்திருந்தால் செய்தி மக்களை சுலபமாக சென்றடைந்து இருக்கும். அவர்கள், இலவசம் என வந்து கண்டு ரசித்து இருப்பார்கள். வெளியூர், சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் அதிகமானோர் வந்து பார்த்திருப்பார்கள். எனவே, இலவசமாக சுற்றி பார்க்கலாம் என்ற தகவலை 2 நாட்களுக்கு முன்னதாக சம்மந்தப்பட்ட தொல்லியல் துறை அதிகாரிகள் அறிவிக்க வேண்டும் என பள்ளி மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post உலக பாராம்பரிய வாரத்தையொட்டி இலவச அனுமதி புராதன சின்னங்களை காண மாமல்லபுரத்தில் குவிந்த மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,World Heritage Week ,World Heritage Day ,Dinakaran ,
× RELATED உலக பாரம்பரிய வாரத்தையொட்டி புராதன சின்னங்களை இலவசமாக இன்று பார்க்கலாம்