- திம்மவரம்
- செங்கல்பட்டு
- அமைச்சர்
- சிறு, சிறிய மற்றும் நடுத்தர தொழில் தொழில் துறை
- வருவாய் திணைக்களம்
- தின மலர்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு முறை உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டம் பொதுமக்களின் குறைகளை மனுவாக பெற்று, அதை தீர்க்க முகாம் நடைபெற்றும். இம்முகாமில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொள்வார்கள். அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பகுதியில் பல ஏக்கர் அரசுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமித்து செய்துள்ளதாகவும், செங்கல்பட்டு – காஞ்சிபுரம் சாலை விரிவாக்க பணிகளுக்கு ஆக்கிரமிப்புகளை ஏற்கனவே அகற்றம் செய்தும், பொதுமக்களை நெடுஞ்சாலை அதிகாரிகள் அடிக்கடி தொந்தரவு செய்வதாக புகார் கொடுத்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உத்தரவின்பேரில், செங்கல்பட்டு வட்டாட்சியர் பூங்குழலி தலைமையில் வருவாய்துறையினர், திம்மாவரம் பகுதியில் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், அரசுக்கு சொந்தமான இடங்களை சிலர் ஆக்கிரமித்து செய்துள்ள இடத்தையும், சாலை விரிவாக்கத்திற்காக குடியிருப்புகளை மாற்று இடத்தில் தங்க வைக்க அதிகாரிகள் திட்டமியுள்ளனர். அந்த இடத்தில் மழை பெய்தால் தண்ணீர் தேங்கும் மக்கள் எப்படி அந்த இடத்தில் குடியிக்க முடியும் என அதிகாரிகளிடம் திம்மாவரம் பகுதி மக்கள் கேள்வி எழுப்பினர். அரசுக்கு சொந்தமான பல கோடி மதிப்பிலான இடங்களை சில மர்ம நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இது சட்ட விரோதமான செயல், ஆக்கிரமிப்பு செய்துள்ள யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட்டாட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். ஆய்வுகளை சேகரித்த வட்டாட்சியர் பூங்குழலி, அனைத்த ஆவணங்களும் மாவட்ட கலெக்டரிடம் சமர்பிக்கப்பட்டு, கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார். ஆய்வின்போது காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், ஒன்றிய குழு உறுப்பினர் அருள்தேவி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
The post அமைச்சரிடம் அளித்த கோரிக்கை மனுவின்பேரில் திம்மாவரம் ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறையினர் ஆய்வு appeared first on Dinakaran.