- சபரிமலை
- பொள்ளாச்சி
- பொல்லாச்சி சந்தை
- கோயம்புத்தூர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஆந்திரப் பிரதேசம்
- கர்நாடக
பொள்ளாச்சி: சபரிமலை சீசன் துவங்கியதால், பொள்ளாச்சி சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்து விற்பனை மந்தமானது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மாட்டு சந்தை நடப்பது வழக்கம். இந்த மாட்டு சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், விற்பனைக்காக அதிக அளவு மாடுகள் கொண்டுவரப்படுகின்றன. வழக்கமாக 1600 முதல் 1800 வரை மாடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்படும். இதில் தமிழக வியாபாரிகள் மற்றும் கேரளா மாநில வியாபாரிகள் மாடுகளை வாங்கி செல்வார்கள். இந்த வாரம் இன்று நடந்த மாட்டு சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்து காணப்பட்டது. கார்த்திகை மாதம் துவக்கம் மற்றும் சபரிமலைக்கு அதிகளவில் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து செல்வது வழக்கம்.
ஆகையால், மாடுகளை வாங்க கேரள மாநில வியாபாரிகள் வருகை குறைந்தது. இந்த வாரம் இன்று நடந்த சந்தைக்கு சுமார் ஆயிரம் முதல் 1200 வரை மாடுகள் வரத்து குறைவாக இருந்தது. மேலும் கேரளா வியாபாரிகள் வருகை மிகவும் குறைவாக இருந்ததால் விற்பனை மந்தமானது. இந்த மாதம் துவக்கத்தில் ரூ.60 ஆயிரம் வரை விற்பனையான எருமை மாடு ரூ.38 ஆயிரத்துக்கும், ரூ.55 ஆயிரத்துக்கு விற்பனையான பசுமாடு ரூ.35 ஆயிரத்துக்கும், நாட்டு மாடு ரூ.40 ஆயிரத்திற்கும் என கடந்த மாதத்தை விட ரூ.5000 முதல் ரூ.8000 வரை குறைவான விலைக்கு மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
The post சபரிமலை சீசன் துவங்கியதால் பொள்ளாச்சி மாட்டு சந்தையில் விற்பனை மந்தம் appeared first on Dinakaran.