×
Saravana Stores

கோபி அருகே மர்ம விலங்கு கடித்து 7 ஆடுகள் பலி


கோபி: கோபி அருகே மர்ம விலங்கு கடித்து 7 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கோட்டுப்புள்ளாம்பாளையம் பூங்கரைபுதூரை சேர்ந்தவர் சக்திவேல் (56). விவசாயியான இவர் 7 ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று வழக்கம் போல் சக்திவேல் ஆடுகளை மேய்த்து விட்டு இரவு அருகே விவசாய நிலத்தில் உள்ள கொட்டகையில் ஆடுகளை அடைத்து வைத்தார். இன்று காலை ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து செல்ல கொட்டகைக்கு சென்ற போது, மர்ம விலங்கு கடித்து 7 ஆடுகளும் இறந்து கிடப்பது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சக்திவேல் இதுகுறித்து டி.என்.பாளையம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன் அயலூர், மல்லிபாளையம் உள்ளிட்ட பகுதியில் 15க்கும் மேற்பட்ட ஆடுகளை மர்ம விலங்கு கடித்து கொன்ற நிலையில், இன்றும் 7 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து உயிரிழந்து இருப்பது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆடுகளை கடித்து கொன்று வரும் மர்ம விலங்குகளை வனத்துறையினர் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கோபி அருகே மர்ம விலங்கு கடித்து 7 ஆடுகள் பலி appeared first on Dinakaran.

Tags : Gobi ,Sakthivel ,Kottupullampalayam Poongaraiputhur ,Gopi ,Erode district ,
× RELATED கோபி அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது