×
Saravana Stores

மேட்டூர் அணை நீர் மட்டம் மீண்டும் உயர்கிறது

மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம், விநாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 9,154 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 10,449 கனஅடியாக அதிகரித்தது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு, நேற்று முன்தினம் மாலை 500 கனஅடியாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கனஅடி என்பது 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் 106.51 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 106.98 அடியாக அதிகரித்தது.

 

The post மேட்டூர் அணை நீர் மட்டம் மீண்டும் உயர்கிறது appeared first on Dinakaran.

Tags : Mettur dam ,Mettur ,Okanagan Cauvery ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு